இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் உண்ணும்போது தமது வலது கையால் உண்ணட்டும். அவர் பருகும்போது தமது வலது கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் தனது இடது கையால் உண்கிறான்; மேலும் தனது இடது கையால் பருகுகிறான்."
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் உண்ணும்போது, தமது வலது கரத்தால் உண்ணட்டும்; மேலும் தமது வலது கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் தனது இடது கரத்தால் உண்கிறான்; மேலும் தனது இடது கரத்தால் பருகுகிறான்.”