இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

132சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنَ الْخَلاَءِ فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فَقَالُوا أَلاَ نَأْتِيكَ بِوَضُوءٍ فَقَالَ ‏ ‏ إِنَّمَا أُمِرْتُ بِالْوُضُوءِ إِذَا قُمْتُ إِلَى الصَّلاَةِ ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களுக்கு உணவு கொண்டுவரப்பட்டது. (அப்போது அங்கிருந்தவர்கள்) "உங்களுக்கு உளூ (செய்வதற்காகத் தண்ணீர்) கொண்டு வர வேண்டாமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நான் தொழுகைக்காக எழும்போது (மட்டும்) உளூச் செய்யுமாறுதான் கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
3760சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنَ الْخَلاَءِ فَقُدِّمَ إِلَيْهِ طَعَامٌ فَقَالُوا أَلاَ نَأْتِيكَ بِوَضُوءٍ فَقَالَ ‏ ‏ إِنَّمَا أُمِرْتُ بِالْوُضُوءِ إِذَا قُمْتُ إِلَى الصَّلاَةِ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. (அங்கிருந்த) மக்கள், "தங்களுக்கு உளூச் செய்வதற்காக தண்ணீர் கொண்டு வரட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நான் தொழுகைக்காக எழும்போது மட்டுமே உளூச் செய்யுமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)