அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சில) பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தார்கள். ஆனால் அன்சாரிகள் (ரழி), "அவை இல்லாமல் எங்களால் இருக்க முடியாது" என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.