அபூ அய்யூப் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு மனிதர் தம் முஸ்லிம் சகோதரரை மூன்று இரவுகளுக்கு மேல் புறக்கணிப்பது ஆகுமானதல்ல. (அவர்கள் சந்திக்கும்போது, ஒருவர் மற்றவரை விட்டும் தம் முகத்தைத் திருப்பிக்கொள்வதும், மற்றவர் இவரை விட்டும் தம் முகத்தைத் திருப்பிக்கொள்வதும் அவர்களுக்கு ஆகுமானதல்ல.) இவ்விருவரில் யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே சிறந்தவர் ஆவார்."
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ، يَلْتَقِيَانِ فَيَصُدُّ هَذَا، وَيَصُدُّ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ . وَذَكَرَ سُفْيَانُ أَنَّهُ سَمِعَهُ مِنْهُ ثَلاَثَ مَرَّاتٍ.
அபூ அய்யூப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் (அவருடன் பேசாமல்) பிணங்கியிருப்பது ஆகுமானதல்ல. அவ்விருவரும் சந்திக்கும்போது, இவர் ஒரு பக்கமும் அவர் மறுபக்கமும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவ்விருவரில் சிறந்தவர், யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே ஆவார்."
அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தன் சகோதரருடன் மூன்று இரவுகளுக்கு மேல், சந்திக்கும்போது ஒருவன் ஒரு பக்கமும் மற்றவன் மறுபக்கமும் திரும்பிக்கொள்ளும் விதமாக பகைமை பாராட்டுவது கூடாது; இவ்விருவரில் சிறந்தவர், யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே.