அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கையாளர் கபடமற்றவராகவும் (எளிதில் நம்பக்கூடியவராகவும், உள்ளத்தில் தூய்மையானவராகவும்), பெருந்தன்மையானவராகவும் இருக்கிறார். ஆனால் நெறிகெட்டவன் வஞ்சகம் நிறைந்தவனாகவும், இழிவானவனாகவும் இருக்கிறான்.”