حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، قَالَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَمَا بِي أَنْ أَكُونَ أَدْرَكْتُهَا وَمَا ذَاكَ إِلاَّ لِكَثْرَةِ ذِكْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَهَا وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ فَيَتَتَبَّعُ بِهَا صَدَائِقَ خَدِيجَةَ فَيُهْدِيهَا لَهُنَّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் நான் கதீஜா (ரழி) அவர்கள் மீது பொறாமை கொண்டதைப் போன்று வேறு எவர் மீதும் பொறாமை கொண்டதில்லை. நான் அவர்களைப் பார்த்ததும் இல்லை (ஏனெனில் கதீஜா (ரழி) அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களை மணப்பதற்கு முன்பே காலமானார்கள்). ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்னாரை அதிகமாக நினைவு கூர்ந்ததே அதற்குக் காரணமாகும். அவர்கள் ஓர் ஆட்டை அறுத்தால், கதீஜா (ரழி) அவர்களின் தோழிகளைத் தேடி அவர்களுக்குப் பரிசளிப்பார்கள்.