எவர் சுப்ஹு (ஃபஜ்ர்) தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, அல்லாஹ் தனது பாதுகாப்புத் தொடர்பாக உங்களிடம் எதையும் கோராதவாறு (அதாவது, சுப்ஹு தொழுதவரைத் துன்புறுத்தி, அல்லாஹ்வின் பாதுகாப்பை மீறியதற்காக உங்களிடம் கேள்வி கேட்காதவாறு) இருந்து கொள்ளுங்கள். ஏனெனில், (அவ்வாறு மீறி, உங்களிடம்) அவன் (கேள்வி) கோரினால், உங்களைப் பிடித்து, பின்னர் உங்களை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்.