தௌபான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் உம்மத்திலிருந்து ஒரு கூட்டத்தினர் எப்போதும் சத்தியத்தின் மீது நிலைத்தவர்களாகவும், மிகைத்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களைக் கைவிடுபவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய இயலாது. அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள் அல்லது அதற்கு முந்தைய ஒரு நிகழ்வு) வரும் வரை அவர்கள் அதே நிலையில்தான் இருப்பார்கள்."
குதைபா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், "அவர்கள் அதே நிலையில்தான் இருப்பார்கள்" எனும் வார்த்தைகள் இல்லை.