அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஈமான் (நம்பிக்கை) யமன்வாசிகளிடம் உள்ளது; இறைமறுப்பு கிழக்குத் திசையில் உள்ளது; அமைதி ஆடு மேய்ப்பவர்களிடம் உள்ளது; பெருமையும் பகட்டும் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களை உடைய (கூச்சலிடும்) கூட்டத்தாரிடம் உள்ளது."