இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7092ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَامَ إِلَى جَنْبِ الْمِنْبَرِ فَقَالَ ‏"‏ الْفِتْنَةُ هَا هُنَا الْفِتْنَةُ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ ‏"‏‏.‏ أَوْ قَالَ ‏"‏ قَرْنُ الشَّمْسِ ‏"‏‏.‏
சாலிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மிம்பருக்கு அருகில் நின்று கொண்டு, "குழப்பம் (ஃபித்னா) இதோ இங்கேதான்! குழப்பம் இதோ இங்கேதான்! (அதாவது, கிழக்குத் திசையிலிருந்து) ஷைத்தானின் கொம்பு எங்கிருந்து உதயமாகிறதோ அங்கிருந்துதான்," என்று கூறினார்கள். அல்லது "சூரியனின் கொம்பு..." என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح