இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5976ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ الْوَاسِطِيُّ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ‏"‏‏.‏ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ ‏"‏‏.‏ وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ فَقَالَ ‏"‏ أَلاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ، أَلاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ ‏"‏‏.‏ فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى قُلْتُ لاَ يَسْكُتُ‏.‏
அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரிய பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினோம். அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது; பெற்றோர்க்கு மாறு செய்வது" என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் (எழுந்து) அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள்! புனைந்துரைப்பதும், பொய் சாட்சியம் கூறுவதும் (பெரும் பாவங்களாகும்). அறிந்து கொள்ளுங்கள்! புனைந்துரைப்பதும், பொய் சாட்சியம் கூறுவதும் (பெரும் பாவங்களாகும்)" என்று கூறினார்கள். 'அவர்கள் மௌனமாக மாட்டார்களா?' என்று நான் (எனக்குள்) கூறும் அளவிற்கு, அவர்கள் அதைத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6273ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ‏"‏‏.‏ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ ‏"‏‏.‏
அபு பக்கரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரிய பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" அவர்கள் கூறினார்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே (ஸல்)!" அவர்கள் (ஸல்) கூறினார்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, மேலும் பெற்றோருக்கு மாறு செய்வது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح