பனீ ஃபிஹ்ர் குலத்தைச் சேர்ந்த முஸ்தவ்ரித் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலகம் (என்பது), உங்களில் ஒருவர் தமது இந்த விரலை – (இதைச் சொல்லும்போது யஹ்யா அவர்கள் தமது ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள்) – கடலில் இட்டு, அது எதைக் கொண்டு திரும்புகிறது என்று பார்ப்பதைப் போன்றதேயாகும்."