இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6534ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ كَانَتْ عِنْدَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ فَلْيَتَحَلَّلْهُ مِنْهَا، فَإِنَّهُ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ مِنْ قَبْلِ أَنْ يُؤْخَذَ لأَخِيهِ مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ أَخِيهِ، فَطُرِحَتْ عَلَيْهِ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எவரிடமேனும் தம் சகோதரருக்கு இழைத்த அநீதி இருக்குமானால், அதிலிருந்து அவர் (இவ்வுலகிலேயே) விடுபட்டுக்கொள்ளட்டும். ஏனெனில், அங்கே (மறுமையில்) தீனாரோ திர்ஹமோ இருக்காது. (அநீதி இழைத்தவரின்) நற்செயல்களிலிருந்து அவருடைய சகோதரருக்கு (பழிவாங்கலாக) எடுக்கப்படுவதற்கு முன்னால் (அவர் இவ்வுலகிலேயே தீர்த்துக்கொள்ளட்டும்). அவரிடம் நற்செயல்கள் ஏதும் இல்லையென்றால், அவருடைய சகோதரரின் தீய செயல்களிலிருந்து எடுக்கப்பட்டு, இவர்மீது சுமத்தப்படும்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح