حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ وَيَحْيَى بْنُ يَمَانٍ حَدَّثَنَا عَنْ
هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كُنَّا آلَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم لَنَمْكُثُ
شَهْرًا مَا نَسْتَوْقِدُ بِنَارٍ إِنْ هُوَ إِلاَّ التَّمْرُ وَالْمَاءُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள், ஒரு மாதம் முழுவதையும் (சமைப்பதற்கு எதுவும் இல்லாததால்) நெருப்பை மூட்டாமலேயே கழிப்பதுண்டு; (எங்கள் வயிற்றை நிரப்ப) பேரீச்சம்பழங்களும் தண்ணீரும் மட்டுமே எங்களிடம் இருக்கும்.