இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1515அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ مَنْ عَيَّرَ أَخَاهُ بِذَنْبٍ, لَمْ يَمُتْ حَتَّى يَعْمَلَهُ } أَخْرَجَهُ اَلتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَسَنَدُهُ مُنْقَطِعٌ.‏ [1]‏ .‏
முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யாரேனும் தனது சகோதரனை (ஒரு முஸ்லிமை அல்லது மனிதனை) ஒரு பாவத்திற்காக பழித்துரைத்து இழிவுபடுத்தினால், தாமும் அந்தப் பாவத்தைச் செய்யாமல் அவர் மரணிக்க மாட்டார்.”

இதை திர்மிதீ அவர்கள் பதிவுசெய்து, ஹஸன் தரத்தில் உள்ளது எனத் தரம் பிரித்துள்ளார்கள். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும்.