அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆதமுடைய மக்கள் மூட்டும் உங்களின் இந்த நெருப்பானது, நரக நெருப்பின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பாகமாகும்."
அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதுவே போதுமானதாக இருந்திருக்குமே!" என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக நரக நெருப்பு இதைவிட அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது; அவை ஒவ்வொன்றும் இந்த நெருப்பின் வெப்பத்தைப் போன்றதாகும்" என்று கூறினார்கள்.