அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: எங்களிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டு, அதை மனனம் செய்து, அதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு மனிதரை அல்லாஹ் பொலிவாக்குவானாக. அறிவைச் சுமக்கும் எத்தனையோ பேர், தங்களை விட அதிக தேர்ச்சி பெற்றவர்களிடம் அதைக் கொண்டு சேர்க்கிறார்கள்; மேலும் அறிவைச் சுமக்கும் எத்தனையோ பேர் அதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதில்லை.