அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு முஃமின் சக முஃமினுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறு: அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை நலம் விசாரிப்பது, அவர் இறந்தால் அவருடைய ஜனாஸாவில் கலந்துகொள்வது, அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வது, அவரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் சொல்வது, அவர் தும்மும்போது அவருக்கு (யர்ஹமுகல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்குக் கருணை காட்டுவானாக என்று கூறி) பதில் சொல்வது, அவர் இருக்கும்போதும் இல்லாதபோதும் அவருக்கு நலம் நாடுவது." (ஹஸன்).