حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ الْيَمَامِيُّ، وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، قَالاَ حَدَّثَنَا
النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، - وَهُوَ ابْنُ عَمَّارٍ - حَدَّثَنَا إِيَاسٌ، عَنْ أَبِيهِ، قَالَ لَقَدْ قُدْتُ
بِنَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم وَالْحَسَنِ وَالْحُسَيْنِ بَغْلَتَهُ الشَّهْبَاءَ حَتَّى أَدْخَلْتُهُمْ حُجْرَةَ
النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا قُدَّامَهُ وَهَذَا خَلْفَهُ .
இயாஸ் அவர்கள் தங்களது தந்தை (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்:
'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும், ஹஸன் மற்றும் ஹுஸைன் (ரழி) அவர்களையும், நபி (ஸல்) அவர்களின் ஷஹ்பா (சாம்பல் நிறம் கலந்த வெள்ளை) கோவேறு கழுதையின் மீது (ஏற்றி), அவர்களை நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சேர்க்கும் வரை வழிநடத்திச் சென்றேன். அப்போது (ஹஸன் மற்றும் ஹுஸைன் ஆகிய) அவர்களில் ஒருவர் அன்னாருக்கு முன்னாலும், மற்றவர் அன்னாருக்குப் பின்னாலும் (கழுதையின் மீது) இருந்தனர்.'