حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّهُ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَقْبِيَةً وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ شَيْئًا فَقَالَ مَخْرَمَةُ يَا بُنَىَّ انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَانْطَلَقْتُ مَعَهُ قَالَ ادْخُلْ فَادْعُهُ لِي . قَالَ فَدَعَوْتُهُ لَهُ فَخَرَجَ إِلَيْهِ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا فَقَالَ " خَبَأْتُ هَذَا لَكَ " . قَالَ فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ " رَضِيَ مَخْرَمَةُ " .
மிஸ்வர் பின் மக்ரமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில மேலங்கிகளைப் பங்கிட்டார்கள்; ஆனால் மக்ரமா (ரழி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே மக்ரமா (ரழி) அவர்கள், "என் அருமை மகனே! என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வா" என்று கூறினார்கள். அவ்வாறே நான் அவருடன் சென்றேன். அவர் (மக்ரமா), "(வீட்டிற்குள்) நுழைந்து எனக்காக அவர்களை (வெளியே) அழைத்து வா" என்று கூறினார்கள். நான் அவர்களுக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வெளியே வந்தார்கள்; அவர்கள்மீது அந்த மேலங்கிகளிலிருந்து ஒரு மேலங்கி இருந்தது. அவர்கள், "இதை உனக்காக நான் (எடுத்து) வைத்திருந்தேன்" என்று கூறினார்கள். அவர் (மக்ரமா) அதைப் பார்த்தார். (அப்போது) "மக்ரமா திருப்தியடைந்துவிட்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.