அன்-நவ்வாஸ் இப்னு சம்ஆன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "மறுமை நாளில் குர்ஆனும், அதன்படி அமல் செய்தவர்களும் கொண்டுவரப்படுவார்கள்; சூரத்துல் பகராவும் ஆல இம்ரானும் அவர்களுக்கு முன்னே செல்லும்." அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த இரண்டு சூராக்களையும் மூன்று விஷயங்களுக்கு ஒப்பிட்டார்கள் – அந்த ஒப்பீட்டை நான் அதன்பின் மறக்கவில்லை – நபி (ஸல்) அவர்கள் அவற்றை இரண்டு மேகங்கள் என்றோ, அல்லது அவற்றுக்கு இடையில் ஒளி உள்ள இரண்டு கரிய பந்தல்கள் என்றோ, அல்லது அவற்றை ஓதியவருக்காகப் பரிந்து பேசும் விதத்தில் அணிவகுத்து நிற்கும் இரண்டு பறவைக் கூட்டங்களைப் போன்றது என்றோ ஒப்பிட்டார்கள்.