நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவர் ஒருவர் குர்ஆனை ஓதி, அதை மனனம் செய்து அதில் தேர்ச்சி பெறுகிறாரோ, அவர் (சொர்க்கத்தில்) கண்ணியமிக்க, நீதிமான்களான எழுத்தர்களுடன் இருப்பார். மேலும், எவர் ஒருவர் குர்ஆனை மனனம் செய்ய சிரமப்பட்டு, அதை மிகுந்த கஷ்டத்துடன் ஓதுகிறாரோ, அவருக்கோ இரு மடங்கு நற்கூலி உண்டு."
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர், கண்ணியமிக்க, செம்மையான, (செயல்களைப்) பதிவுசெய்கின்ற வானவர்களுடன் இணைக்கப்படுவார்கள்; மேலும், எவர் அதில் (குர்ஆனில்) திக்கித் திணறி ஓதுகிறாரோ, அது அவருக்குக் கடினமாகவும் இருக்கிறதோ, அவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு.