அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமூகத்தாரின் நற்கூலிகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன; ஒருவர் பள்ளிவாசலில் இருந்து ஒரு சிறு குப்பையை அகற்றுவதற்கான நற்கூலியும் எனக்குக் காட்டப்பட்டது. என் சமூகத்தாரின் பாவங்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தையோ அல்லது ஒரு வசனத்தையோ மனனம் செய்துவிட்டு, அதை மறந்துவிடுவதை விடப் பெரிய பாவத்தை நான் காணவில்லை.