நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ரு (தொழுகை) பற்றிக் கேட்டேன். (பிறகு) அந்த ஹதீஸை அவர் குறிப்பிட்டார். (தொடர்ந்து) நான், “ஜனாபத் (பெருந்தொடக்கு) நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்? உறங்குவதற்கு முன் குளிப்பார்களா அல்லது குளிப்பதற்கு முன் உறங்குவார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். சில நேரங்களில் குளித்துவிட்டு உறங்குவார்கள்; சில நேரங்களில் உளூச் செய்துவிட்டு உறங்குவார்கள்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நான், “அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)! அவன் இக்காரியத்தில் விசாலத்தன்மையை ஏற்படுத்தியுள்ளான்” என்று கூறினேன்.