முஸ்அப் பின் ஸஅத் அவர்கள், தம் தந்தை (ஸஅத் பின் அபீ வக்காஸ் ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க இயலாதா?" என்று கேட்டார்கள்.
அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் எவ்வாறு ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "அவர் நூறு முறை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) செய்தால், அவருக்காக ஆயிரம் நன்மைகள் பதிவு செய்யப்படுகின்றன அல்லது அவரை விட்டும் ஆயிரம் பாவங்கள் அழிக்கப்படுகின்றன" என்று கூறினார்கள்.