சஃது (ரழி) அவர்கள், தங்களின் தந்தையாரோ அல்லது மாமாவோ கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்; நான் நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள், ஒருவர் “அல்லாஹ் தூயவன், அவனுக்கே புகழ் அனைத்தும்” என்று மூன்று முறை கூறும் நேரம் வரை தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் தங்கியிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் ‘மகத்துவமிக்க அல்லாஹ் தூய்மையானவன், அவனுக்கே புகழ் அனைத்தும் (சுப்ஹானல்லாஹில் அழீம், வ பிஹம்திஹி)’ என்று கூறுகிறாரோ, அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீச்சை மரம் நடப்படுகிறது.”