அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், தனது அடியான் மனம் வருந்தித் தன்னிடம் மீண்டு தவ்பாச் செய்யும்போது, உங்களில் ஒருவர் தமது தொலைந்துபோன ஒட்டகத்தைக் கண்டடையும்போது அடையும் மகிழ்ச்சியை விட அதிகமாக மகிழ்ச்சியடைகிறான்.