ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் தம் தந்தையார் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்:
ஸைத் இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களை 'ஸைத் இப்னு முஹம்மத் (ஸல்)' என்றே நாங்கள் அழைத்து வந்தோம்; குர்ஆனில் (பின்வரும் வசனம்) வஹீ (இறைச்செய்தி) அருளப்படும் வரை:
"அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலேயே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதியானது"
(இந்த ஹதீஸ் குதைபா இப்னு ஸஃத் அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது)