அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்கள் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்து மலைகளில் தஞ்சம் புகுவார்கள்" என்று கூற நான் கேட்டேன். உம்மு ஷரீக் (ரழி) அவர்கள் (அப்போது), "அந்நாளில் அரபியர்கள் எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (அதற்கு), "அவர்கள் (அந்நாளில்) எண்ணிக்கையில் குறைவாக இருப்பார்கள்" என்று கூறினார்கள்.