இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4818ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، قَالَ سَمِعْتُ طَاوُسًا، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ‏.‏ أَنَّهُ سُئِلَ عَنْ قَوْلِهِ ‏{‏إِلاَّ الْمَوَدَّةَ فِي الْقُرْبَى‏}‏ فَقَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ قُرْبَى آلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَقَالَ ابْنُ عَبَّاسٍ عَجِلْتَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ بَطْنٌ مِنْ قُرَيْشٍ إِلاَّ كَانَ لَهُ فِيهِمْ قَرَابَةٌ فَقَالَ إِلاَّ أَنْ تَصِلُوا مَا بَيْنِي وَبَيْنَكُمْ مِنَ الْقَرَابَةِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அவர்களிடம் (இது தொடர்பாக) கேட்கப்பட்டது: "என்னுடன் உங்களுக்குள்ள உறவுமுறையின் காரணமாக என்னிடம் அன்பாக நடந்துகொள்வதைத் தவிர.' (42:23) ஸயீத் பின் ஜுபைர் அவர்கள் (அப்போது அங்கே இருந்தார்கள்) கூறினார்கள், "இதன் பொருள் இங்கே முஹம்மது (ஸல்) அவர்களின் உறவினர்களிடம் (காட்டவேண்டிய) அன்பாகும்." அதன்பேரில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பதில் அளிப்பதில் அவசரப்பட்டு விட்டீர்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு உறவினர்கள் இல்லாத குரைஷ் கோத்திரத்தின் எந்தக் கிளையும் இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என்னுடன் உங்களுக்குள்ள உறவுமுறையின் காரணமாக என்னிடம் அன்பாக நடந்துகொள்வதைத் தவிர, நான் (உங்களிடமிருந்து) எதையும் விரும்பவில்லை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح