இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2517முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ﷺ أَفْطَرَ بِعَرَفَةَ قَالَ بَعَثَتْ إلَيْهِ أُمُّ الْفَضْلِ بِلَبَنٍ فَشَرِبَهُ
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் (அரஃபா பெருவெளியில் தங்கியிருந்த போது) நோன்பு நோற்கவில்லை. உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலைக் கொடுத்தனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் (மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே) பருகினார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح