இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் குபாவில் ஃபஜ்ர் தொழுகையில் இருந்தபோது, ஒருவர் அவர்களிடம் வந்து, “இன்றிரவு குர்ஆன் அருளப்பட்டுள்ளது. (அதில்) கஅபாவை முன்னோக்குமாறு (நபிக்கு) கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே நீங்களும் அதனையே முன்னோக்குங்கள்” என்று கூறினார். உடனே அவர்கள் தங்கள் (தொழும்) நிலையிலேயே திரும்பிக்கொண்டு கஅபாவை முன்னோக்கினார்கள். (முன்பு) மக்களின் முகங்கள் ஷாம் (ஜெருசலேம்) திசையை நோக்கியிருந்தன.