இப்னு உமர் (ரழி) அவர்கள் 'ஜம்உ' (முஸ்தலிஃபா)வில் மஃரிப் மற்றும் இஷா ஆகிய (இரு) தொழுகைகளை ஒரே இகாமத்தின் மூலம் (சேர்த்துத்) தொழுதார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள், "அபூ அப்துர்ரஹ்மானே! (வழக்கத்திற்கு மாற்றமான) இது என்ன தொழுகை?" என்று அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "நான் இதே இடத்தில் (முஸ்தலிஃபாவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரே இகாமத்தின் மூலம் இதைத் தொழுதிருக்கிறேன்" என்று பதிலளித்தார்கள்.