அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
எனக்கு மனைவியாக இருந்த ஒரு பெண்ணை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், (என் தந்தை) உமர் (ரழி) அவர்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை. எனவே, அவளை விவாகரத்து செய்துவிடும்படி என்னிடம் கூறினார்கள். நான் (அவள் மீது கொண்ட அன்பின் காரணமாக) அதற்கு மறுத்துவிட்டேன்.
உடனே உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ் பின் உமரிடம் ஒரு மனைவி இருக்கிறாள்; அவளை எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவளை விவாகரத்து செய்யும்படி நான் அவனுக்குக் கட்டளையிட்டேன். ஆனால், அவன் மறுத்துவிட்டான்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ் பின் உமரே! உமது மனைவியை விவாகரத்து செய்வீராக; உமது தந்தைக்குக் கட்டுப்படுவீராக!" என்று கூறினார்கள்.
(இதையடுத்து) "நான் அவளை விவாகரத்து செய்தேன்" என்று அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
ஹதீஸ் தரம் : இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகிய இருவரின் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது