அபூஉமாமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காகக் கொடுத்து, அல்லாஹ்வுக்காகத் தடுத்துக் கொண்டாரோ, அவர் ஈமானைப் பூரணப்படுத்திக் கொண்டார்.
ஸஹ்ல் பின் முஆத் பின் அனஸ் அல்ஜுஹ்னி (ரழி) அவர்கள் தனது தந்தை (ரழி) இடமிருந்து அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் அல்லாஹ்வுக்காகக் கொடுக்கிறாரோ, அல்லாஹ்வுக்காகத் தடுக்கிறாரோ, அல்லாஹ்வுக்காக நேசிக்கிறாரோ, அல்லாஹ்வுக்காக வெறுக்கிறாரோ, மேலும் அல்லாஹ்வுக்காகத் திருமணம் முடிக்கிறாரோ, அவர் நிச்சயமாகத் தனது ஈமானைப் பூரணப்படுத்திக் கொண்டார்."
அபூஉமாமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யாரேனும் அல்லாஹ்வுக்காக நேசித்தால், அல்லாஹ்வுக்காக வெறுத்தால், அல்லாஹ்வுக்காகக் கொடுத்தால், அல்லாஹ்வுக்காக (கொடுப்பதை) தடுத்துக்கொண்டால், அவர் ஈமானைப் பூரணப்படுத்திக் கொண்டார்.”
இதனை அபூ தாவூத் அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் திர்மிதீ அவர்கள் இதனை முஆத் பின் அனஸ் (ரழி) அவர்களிடமிருந்து சொற்கள் முன்னும் பின்னும் மாற்றப்பட்ட நிலையில் அறிவிக்கிறார்கள். அதில், “அவர் தனது ஈமானைப் பூரணப்படுத்திக்கொண்டார்” என்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஆய்வு செய்யப்படவில்லை (அல்பானி), இஸ்னாதுஹு ஹஸன், இஸ்னாதுஹு ஹஸன் (ஸுபைர் அலீ ஸயீ)
لم تتمّ دراسته, لم تتمّ دراسته (الألباني) إسنادہ حسن, إسنادہ حسن (زبیر علی زئی)
முஆத் பின் அனஸ் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் அல்லாஹ்வுக்காகவே (பிறருக்கு) வழங்குகிறாரோ, அல்லாஹ்வுக்காகவே (வழங்குவதைத்) தடுத்துக் கொள்கிறாரோ, அல்லாஹ்வுக்காகவே நேசிக்கிறாரோ, அல்லாஹ்வுக்காகவே வெறுக்கிறாரோ, மேலும் அல்லாஹ்வுக்காகவே திருமணம் செய்து வைக்கிறாரோ அவர் ஈமானை (இறைநம்பிக்கையை) முழுமைப்படுத்திவிட்டார்."
ஹதீஸ் தரம் : இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகிய இருவரின் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது