இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

16000முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ مَوْلَى بَنِي هَاشِمٍ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ عَنْ أَبِي حَبَّةَ الْبَدْرِيِّ قَالَ لَمَّا نَزَلَتْ لَمْ يَكُنْ قَالَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ يَا مُحَمَّدُ إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ هَذِهِ السُّورَةَ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقَالَ النَّبِيُّ ﷺ يَا أُبَيُّ إِنَّ رَبِّي عَزَّ وَجَلَّ أَمَرَنِي أَنْ أُقْرِئَكَ هَذِهِ السُّورَةَ فَبَكَى وَقَالَ ذُكِرْتُ ثَمَّةَ؟ قَالَ نَعَمْ
அபூஹப்பா அல்பத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

‘லம் யகுன்’ (என்னும் அல்பய்யினா அத்தியாயம்) அருளப்பட்டபோது, ஜிப்ரீல் (அலை) அவர்கள், "முஹம்மதே! இந்த அத்தியாயத்தை உபை பின் கஅப் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்குமாறு உமது இறைவன் உமக்குக் கட்டளையிடுகிறான்" என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (உபை அவர்களிடம்), "உபையே! இந்த அத்தியாயத்தை நான் உமக்கு ஓதிக்காண்பிக்க வேண்டும் என்று வல்லமையும் மாண்பும் மிக்க என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு உபை (ரழி) அவர்கள் (மகிழ்ச்சியினால்) அழுதுவிட்டார்கள். மேலும், "(இறைவனிடத்தில்) அங்கு என் பெயர் (குறிப்பாகச்) சொல்லப்பட்டதா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் லி கைரிஹி (பிற சான்றுகளின் துணையுடன் ஆதாரப்பூர்வமானது)
صحيح لغيره