"நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை எங்களுக்குத் தளபதியாக நியமித்திருந்தார்கள். அவர்களுடன் இணைந்து ஹவாஸின் குலத்தார் மீது நாங்கள் இரவில் திடீர்த்தாக்குதல் நடத்தியபோது, எங்களின் அடையாளச் சொல்லாக (ரகசியக் குறியீடாக) 'அமித், அமித்' (கொல், கொல்) என்பது இருந்தது. அன்றைய இரவில் எனது சொந்தக் கைகளால் ஏழு வீடுகளைச் (கூடாரங்களைச்) சேர்ந்தவர்களை நான் கொன்றேன்."