அபூஹகம் அல்கிஃபாரீ (ரழி) அவர்களின் மகளும், சுலைமான் பின் சுஹைமின் தாயாருமானவர் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "நிச்சயமாக ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு மிக நெருக்கமாகச் செல்வான். அவனுக்கும் சொர்க்கத்திற்கும் இடையில் ஒரு முழம் அளவு தூரம் மட்டுமே எஞ்சியிருக்கும் (அதாவது அவன் சொர்க்கம் செல்வது உறுதி என்பது போன்ற நிலை இருக்கும்). அப்போது அவன் (அல்லாஹ்வின் கோபத்திற்குரிய) ஒரு வார்த்தையைப் பேசுவான். அதன் காரணமாக அவன் சொர்க்கத்தை விட்டும் 'ஸன்ஆ' (நகரத்தின் தூரத்தை) விட வெகு தொலைவிற்குத் தூரமாக்கப்படுவான்."
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ளயீஃப் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது)