இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1316சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الْخَطْمِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُقْبَةَ بْنِ الْفَاكِهِ بْنِ سَعْدٍ، عَنْ جَدِّهِ الْفَاكِهِ بْنِ سَعْدٍ، - وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ النَّحْرِ وَيَوْمَ عَرَفَةَ وَكَانَ الْفَاكِهُ يَأْمُرُ أَهْلَهُ بِالْغُسْلِ فِي هَذِهِ الأَيَّامِ ‏.‏
ஃபாகிஹ் பின் சஅத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (அவர் ஒரு நபித்தோழர் ஆவார்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபித்ர் பெருநாள் அன்றும், நஹ்ர் பெருநாள் அன்றும், அரஃபா நாள் அன்றும் குளிப்பார்கள். மேலும், ஃபாகிஹ் (ரழி) அவர்கள் தமது குடும்பத்தினரை இந்த நாட்களில் குளிக்குமாறு பணிப்பார்கள்.
ஹதீஸ் தரம் : இட்டுக்கட்டப்பட்டது (தாருஸ்ஸலாம் பதிப்பு)