இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2972ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي، الْعَلاَءِ عَنْ مُطَرِّفٍ، قَالَ قَالَ لِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ إِنِّي لأُحَدِّثُكَ بِالْحَدِيثِ الْيَوْمَ يَنْفَعُكَ اللَّهُ بِهِ بَعْدَ الْيَوْمِ وَاعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَعْمَرَ طَائِفَةً مِنْ أَهْلِهِ فِي الْعَشْرِ فَلَمْ تَنْزِلْ آيَةٌ تَنْسَخُ ذَلِكَ وَلَمْ يَنْهَ عَنْهُ حَتَّى مَضَى لِوَجْهِهِ ارْتَأَى كُلُّ امْرِئٍ بَعْدُ مَا شَاءَ أَنْ يَرْتَئِيَ ‏.‏
முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) என்னிடம் கூறினார்கள்: "இன்று நான் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கிறேன்; இதன் மூலம் அல்லாஹ் இன்றுக்குப் பிறகு உமக்கு நற்பயனளிப்பானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தாரில் ஒரு சாராரை (துல்ஹஜ் மாதத்தின்) பத்து நாட்களில் உம்ராச் செய்யவைத்தார்கள் என்பதை நன்கு அறிந்துகொள்! இதை மாற்றும் விதமாக (குர்ஆனில்) எந்த வசனமும் அருளப்படவில்லை; நபி (ஸல்) அவர்கள் (இவ்வுலகை விட்டுப்) பிரியும் வரை அதைத் தடுக்கவுமில்லை. (எனவே,) அவர்களுக்குப் பிறகு ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றிய கருத்தைக் கூறலாயினர்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2980ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، وَمُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالاَ حَدَّثَنَا بِشْرُ، بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُسْلِمٍ، عَنْ أَبِي رَجَاءٍ، قَالَ قَالَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ نَزَلَتْ آيَةُ الْمُتْعَةِ فِي كِتَابِ اللَّهِ - يَعْنِي مُتْعَةَ الْحَجِّ - وَأَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ لَمْ تَنْزِلْ آيَةٌ تَنْسَخُ آيَةَ مُتْعَةِ الْحَجِّ وَلَمْ يَنْهَ عَنْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى مَاتَ ‏.‏ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ بَعْدُ مَا شَاءَ ‏.‏
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் வேதத்தில் 'முத்ஆ' பற்றிய வசனம் அருளப்பட்டது. அதாவது ஹஜ்ஜின் முத்ஆ (தமத்துஃ) ஆகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைச் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர் ஹஜ்ஜின் முத்ஆவை இரத்துச் செய்யும் எந்த வசனமும் அருளப்படவில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இறக்கும் வரை அதைத் தடுக்கவில்லை. (இதற்குப் பிறகு) ஒரு மனிதர் தமது சுயக் கருத்தின்படி தான் விரும்பியதைக் கூறினார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2981ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عِمْرَانَ الْقَصِيرِ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، ‏.‏ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ وَفَعَلْنَاهَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يَقُلْ وَأَمَرَنَا بِهَا ‏.‏
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் வழியாக (முன்னர் வந்த அறிவிப்பைப்) போன்றே மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது. அதில் (அவர்கள்), "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அதை (ஹஜ்ஜுத் தமத்துவை) செய்தோம்" என்று கூறினார்கள். ஆனால், "அதைச் செய்யுமாறு (நபியவர்கள்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" என்று அவர்கள் கூறவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو قَالَا ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ثنا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ أنبأ عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ أنبأ سَعِيدٌ الْجُرَيْرِيُّ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ عَنْ مُطَرِّفٍ قَالَ قَالَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ إِنِّي لَأُحَدِّثُكَ الْحَدِيثَ لَعَلَّ اللهَ تَعَالَى يَنْفَعُكَ بِهِ بَعْدَ الْيَوْمِ وَاعْلَمْ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَدْ أَعْمَرَ طَائِفَةً مِنْ أَهْلِهِ فِي عَشْرِ ذِي الْحِجَّةِ وَلَمْ يَنْزِلْ قُرْآنٌ يَنْسَخُهُ رَأَيُ رَجُلٍ بَعْدَمَا شَاءَ أَنْ يَرَى أَخْرَجَهُ مُسْلِمٌ فِي الصَّحِيحِ مِنْ حَدِيثِ الْجُرَيْرِيِّ وَزَادَ وَلَمْ يَنْهَ عَنْهُ حَتَّى مَضَى لِوَجْهِهِ
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
"இன்றைய தினத்திற்குப் பிறகு, அல்லாஹ் உமக்கு இதன் மூலம் பலனளிக்கக்கூடும் என்பதற்காக நான் உமக்கு ஒரு செய்தியை அறிவிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களில் தமது குடும்பத்தாரில் ஒரு குழுவினரை உம்ரா செய்யச் செய்தார்கள் என்பதை அறிந்துகொள். அதனை மாற்றுவதற்கான (நஸ்க் செய்வதற்கான) எந்த குர்ஆன் வசனமும் இறங்கவில்லை. (அதன் பிறகு) ஒருவர் தான் விரும்பியவாறு தனது சுய கருத்தைக் கூறினார் (அதாவது, ஹஜ்ஜுத் தமத்துஃ செய்வதற்குத் தடை விதித்தார்)."

இதை முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தமது 'ஸஹீஹ்' நூலில் அல்-ஜுரைரீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலிருந்து பதிவு செய்துள்ளார்கள். மேலும், "அன்னார் (நபி ஸல் அவர்கள்) இறக்கும் வரை அதனைத் தடை செய்யவில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له