அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அல்முஸனீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வெற்றியின் ஆண்டில் ஒரு பயணத்தின்போது, தமது வாகனத்தின் மீதிருந்தவாறு ‘ஸூரா அல்-ஃபத்ஹ்’ ஓதினார்கள். அப்போது அவர்கள் தமது ஓதுதலில் (குரலை அசைத்து) ராகத்துடன் ஓதினார்கள்.
முஆவியா (பின் குர்ரா) கூறினார்கள்: மக்கள் என்னைச் சூழ்ந்துகொள்வார்கள் என்று நான் அஞ்சியிருக்காவிட்டால், (நபிகளாரின்) அந்த ஓதுதலை உங்களுக்கு நான் செய்துகாட்டியிருப்பேன்.