இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் உபை பின் கஅப் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது குதிங்காலால் (பூமியை) உதைத்து ஸம்ஸம் (நீரூற்றை வெளிப்படுத்திய) போது, இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் (அந்த நீரைச் சுற்றி) மணலைக் குவித்து (அணையிட)லானார்கள்."
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் ஹாஜருக்கு அருள்புரிவானாக! அவர்கள் அதை(த் தடுக்காமல்) அப்படியே விட்டிருந்தால், அது (பூமியின் மேல்) ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரூற்றாக அமைந்திருக்கும்."