இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

16365முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا عَتَّابُ بْنُ زِيَادٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ يَعْنِي ابْنَ مُبَارَكٍ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ عُقْبَةَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنْتُ أَنَا وَأُبَيُّ بْنُ كَعْبٍ وَأَبُو طَلْحَةَ جُلُوسًا فَأَكَلْنَا لَحْمًا وَخُبْزًا ثُمَّ دَعَوْتُ بِوَضُوءٍ فَقَالَا لِمَ تَتَوَضَّأُ؟ فَقُلْتُ لِهَذَا الطَّعَامِ الَّذِي أَكَلْنَا فَقَالَا أَتَتَوَضَّأُ مِنَ الطَّيِّبَاتِ؟ لَمْ يَتَوَضَّأْ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நானும் உபை பின் கஅப் (ரழி) அவர்களும் அபூதல்ஹா (ரழி) அவர்களும் அமர்ந்திருந்தோம். நாங்கள் இறைச்சியும் ரொட்டியும் சாப்பிட்டோம். பின்னர், நான் உளூ (செய்வதற்காகத் தண்ணீர்) கொண்டுவரச் சொன்னேன். அப்போது அவர்கள் இருவரும், "எதற்காக நீர் உளூ செய்கிறீர்?" என்று கேட்டனர். அதற்கு நான், "நாம் சாப்பிட்ட இந்த உணவுக்காக (நெருப்பில் சமைக்கப்பட்ட உணவை உண்டதால் உளூ செய்கிறேன்)" என்று கூறினேன். அதற்கு அவர்கள் இருவரும், "தூய்மையான (நல்ல) உணவுகளை உண்டதற்காகவா நீர் உளூ செய்கிறீர்? உம்மை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள், இத்தகைய உணவை உண்ட பின்) உளு செய்ததில்லை" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஹஸன் (இதன் அறிவிப்பாளர் தொடர் நல்லதாகும்)
إسناده حسن
329மிஷ்காத் அல்-மஸாபீஹ்
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كُنْتُ أَنَا وَأَبِي وَأَبُو طَلْحَةَ جُلُوسًا فَأَكَلْنَا لَحْمًا وَخُبْزًا ثُمَّ دَعَوْتُ بِوَضُوءٍ فَقَالَا لِمَ تَتَوَضَّأُ فَقُلْتُ لِهَذَا الطَّعَامِ الَّذِي أَكَلْنَا فَقَالَا أَتَتَوَضَّأُ مِنَ الطَّيِّبَاتِ لَمْ يَتَوَضَّأْ مِنْهُ مَنْ هُوَ خَيْرٌ مِنْك. رَوَاهُ أَحْمد
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நானும், உபை (ரழி) அவர்களும், அபூதல்ஹா (ரழி) அவர்களும் அமர்ந்து இறைச்சியையும் ரொட்டியையும் சாப்பிட்டோம். அதன் பிறகு, நான் உளூ செய்வதற்காகத் தண்ணீர் கேட்டேன். அவர்கள் இருவரும், “நீங்கள் ஏன் உளூ செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் சாப்பிட்ட இந்த உணவின் காரணமாக (உளூ செய்கிறேன்)” என்று பதிலளித்தேன். அவர்கள் இருவரும், “நல்லவற்றைச் சாப்பிட்ட பிறகு நீங்கள் உளூ செய்வீர்களா? உங்களை விடச் சிறந்தவரான அவர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) அதன் காரணமாக உளூ செய்யவில்லை” என்று கூறினார்கள்.
(இதனை இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.)
ஹதீஸ் தரம் : ஸனது தரமானது (அல்பானி)
جيد الْإِسْنَاد (الألباني)