அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்களின் காலத்தில் நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்தோம். ஒருமுறை நாங்கள் அவரிடம் இருந்தபோது, அவர் மிம்பரில் ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார். பின்னர் அவர், "(ரோமத் தளபதியான) யனாக் என்பவனின் தலை நம்மிடம் கொண்டு வரப்பட்டுள்ளது; நமக்கு இதில் எந்தத் தேவையும் இல்லை. நிச்சயமாக இது அஜமிகளின் (அரபியல்லாத பாரசீக மற்றும் ரோமானியர்களின்) நடைமுறையாகும்" என்று கூறினார்.