இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

26773முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يُونُسُ قَالَ حَدَّثَنَا أَبَانُ يَعْنِي ابْنَ يَزِيدَ الْعَطَّارَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي سُفْيَانَ بْنِ سَعِيدِ بْنِ الْمُغِيرَةِ أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ فَسَقَتْهُ قَدَحًا مِنْ سَوِيقٍ فَدَعَا بِمَاءٍ فَمَضْمَضَ فَقَالَتْ لَهُ يَا ابْنَ أَخِي أَلَا تَتَوَضَّأُ فَإِنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ أَوْ غَيَّرَتْ
அபூசுஃப்யான் பின் ஸயீத் பின் அல்-முஃகீரா (ரஹ்) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரழி) அவர்களிடம் சென்றார்கள். (அப்போது) அவர்கள் இவருக்கு ஒரு கோப்பை 'ஸவீக்' (வறுத்த மாவுப் பானம்) குடிக்கத் தந்தார்கள். (அதைக் குடித்த பின்) இவர் தண்ணீர் கேட்டு (வாங்கி) வாயைக் கொப்பளித்தார்.

அப்போது அவர்கள் (உம்மு ஹபீபா ரழி) இவரிடம், "என் சகோதரரின் மகனே! நீங்கள் உளூச் செய்யக் கூடாதா? ஏனெனில், 'நெருப்பு தீண்டிய அல்லது (நெருப்பால்) மாற்றப்பட்ட (சமைக்கப்பட்ட) உணவுகளை உண்ட பிறகு நீங்கள் உளூச் செய்து கொள்ளுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று சொன்னார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் லி கைரிஹி (பிற சான்றுகளின் துணையுடன் ஆதாரப்பூர்வமானது)
صحيح لغيره