நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(கழுத்தில்) மணி கட்டப்பட்ட (ஒட்டகம் அல்லது விலங்குகள் உள்ள) பயணக் குழுவினருடன் (அருள் புரியும்) வானவர்கள் உடன் செல்ல மாட்டார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் லி கைரிஹி (பிற சான்றுகளின் துணையுடன் ஆதாரப்பூர்வமானது)
உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மணி (கட்டப்பட்ட விலங்குகள்) உள்ள பயணக் குழுவினருடன் (அருள் புரியும்) வானவர்கள் உடன் வரமாட்டார்கள்."
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் (அத்தாரானீ)
உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"மணி இருக்கும் பயணக் குழுவுடன் வானவர்கள் (அருள் புரியும் மலக்குகள்) உடன் வரமாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.