அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஜம்ஆ என்பவருக்கு ஒரு அடிமைப் பெண் இருந்தாள். அவர் அவளுடன் (தாம்பத்திய) உறவு கொண்டிருந்தார். (அதேசமயம்) வேறொரு ஆணும் அவளுடன் (தவறான) உறவு கொள்வதாகக் கருதப்பட்டது. (இந்நிலையில்) அப்பெண் கர்ப்பமாக இருக்கும்போதே ஜம்ஆ இறந்துவிட்டார். பிறகு அப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தை (சந்தேகிக்கப்பட்ட) அந்த ஆணைப் போலவே தோற்றமளித்தது.
இது குறித்து (ஜம்ஆவின் மகளான) சவ்தா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வாரிசுரிமையைப் பொறுத்தவரை அது அவனுக்கே (அக்குழந்தைக்கே) உரியது. (ஸவ்தாவே!) நீ அவனிடமிருந்து உன்னைத் திரையிட்டுக் கொள். ஏனெனில், அவன் உனக்கு (உண்மையான) சகோதரன் அல்லன்" என்று கூறினார்கள்.