حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّ ثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، قَالَتْ أُتِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِطَعَامٍ فَعُرِضَ عَلَيْنَا فَقُلْنَا لاَ نَشْتَهِيهِ . فَقَالَ لاَ تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا .
அஸ்மா பின்த் யஸீத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நபி (ஸல்) அவர்களிடம் உணவு கொண்டுவரப்பட்டது. அது எங்களுக்கும் முன்வைக்கப்பட்டது. நாங்கள், ‘எங்களுக்குப் பசியில்லை’ என்று கூறினோம். அதற்கு அவர்கள், ‘பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதீர்கள்’ என்று கூறினார்கள்.”
நாங்கள் ஆயிஷா (ரழி) அவர்களை (மணப்பெண்ணாக) அலங்கரித்து, (நபி (ஸல்) அவர்களிடம்) அழைத்துச் சென்றவர்களில் இருந்தோம். அப்போது, நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பாலை (குடிப்பதற்காக) வழங்கினார்கள். (நாங்கள் பசியோடு இருந்தும் வெட்கத்தினால்) "எங்களுக்கு அது வேண்டாம்" என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(உண்மையில் பசியோடு இருக்கும்போது வேண்டாம் என்று கூறி) பசியையும் பொய்யையும் ஒன்றாகச் சேர்த்துவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ளயீஃப் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது)