அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ ‘ஹர்ஜ்’ அதிகரிக்காத வரை இறுதி நேரம் வராது.”
அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ‘ஹர்ஜ்’ என்றால் என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “கொலை! கொலை!” என்று கூறினார்கள்.