இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

270ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ حَائِطًا وَتَبِعَهُ غُلاَمٌ مَعَهُ مِيضَأَةٌ هُوَ أَصْغَرُنَا فَوَضَعَهَا عِنْدَ سِدْرَةٍ فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَاجَتَهُ فَخَرَجَ عَلَيْنَا وَقَدِ اسْتَنْجَى بِالْمَاءِ ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது ஒரு சிறுவர் (இஸ்திஞ்ஜா செய்வதற்கான) தண்ணீர் பாத்திரத்துடன் அவர்களைப் பின்தொடர்ந்தார். அவரே எங்களில் வயதில் மிக இளையவராக இருந்தார். அவர் அப்பாக்கிரத்தை ஒரு இலந்தை மரத்தின் அருகே வைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை (மலம் அல்லது சிறுநீர் கழித்து) நிறைவேற்றிக் கொண்டபின், தண்ணீரால் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்ட நிலையில் (எங்களிடம்) வெளியே வந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح